ராகவா லாரன்ஸ் உதவியால் பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி: குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கஷ்டப்படும்போது மக்களுக்கு உதவி செய்வதில் வட இந்தியாவில் ஒரு சோனு சூட் என்றால் தென்னிந்தியாவில் ராகவா லாரன்ஸ் என்று சொல்லலாம். தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் கோடிக்கணக்கில் நிதி வழங்கிய ராகவா லாரன்ஸ், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உணவு உள்பட அடிப்படை தேவைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார். மேலும் அண்டை மாநிலங்களில் சிக்கியுள்ளவர்களை தமிழகத்துக்கு அழைத்து வருவது உள்பட அவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பல குழந்தைகளுக்கு அவர் தனது டிரஸ்ட் மூலம் கல்வி பயில உதவியும் செய்து வருகிறார் என்பது அறிந்ததே. சிறு வயதிலிருந்தே ராகவா லாரன்ஸிடம் வளர்ந்த பலர் நன்கு படித்து இன்று நல்ல நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் சிறு வயதிலேயே தன்னிடம் வந்த இரண்டு குழந்தைகள் தற்போது 11 வகுப்பு தேர்ச்சி அடைந்து உள்ளதை புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். என்னுடைய உடல் நலம் மற்றும் ஒரு சில காரணங்களால் என்னால் சிறு வயதில் படிக்க முடியாமல் போனது. படிக்காததால் நான் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானேன். என்னுடைய நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் நான் ஏழை எளிய குழந்தைகள் படிக்க என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். இந்த இரு குழந்தைகளும் என்னிடம் சிறுவர், சிறுமிகளாக இருக்கும்போது வந்தார்கள். தற்போது 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளார்கள். உங்கள் அனைவருடைய ஆசியும் இந்த குழந்தைகளுக்கு தேவை என்று பதிவு செய்து உள்ளார்

இதனை அடுத்து ராகவா லாரன்ஸுக்கு பாராட்டும் அந்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

More News

'முள்ளும் மலரும்' தர்ஷா குப்தாவின் கிளுகிளுப்பான போட்டோஷூட்!

இந்த கொரோனா கால விடுமுறையில் பிரபல நடிகர், நடிகைகள் பலர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்

தாங்கி பிடிக்க தயங்க வேண்டாம்: முதல்வர் பழனிசாமிக்கு வைரமுத்து வேண்டுகோள்

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட்: லேப் டெக்னீஷியன் கைது!

இளம் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட் எடுத்த லேப் டெக்னீசியன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடன் கட்ட அவகாசம் தந்துவிட்டு வட்டி போடுவதா? கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கோடிக்கணக்கானோர் வேலையிழந்து, வருமானம் இழந்து

சென்னை தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து: அதிர்ச்சி காரணம்

சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது. அதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை