ராகவா லாரன்ஸ் பட இயக்குனர் சாலை விபத்தில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

  • IndiaGlitz, [Tuesday,November 07 2023]

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் முதல் முறையாக ஹீரோவாக நடித்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சாலை விபத்தில் மரணமடைந்த தகவல் திரையுலகினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் கடந்த 2002 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ’அற்புதம்’. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை அற்புதன் என்பவர் இயக்கி இருந்தார்.

ராகவா லாரன்ஸ், குணால், பிரமிட் நடராஜன், லிவிங்ஸ்டன், லாவண்யா, நந்திதா உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்கிய அற்புதன் சமீபத்தில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அற்புதன், சிகிச்சையின் பலன் இன்றி சற்றுமுன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த இயக்குனர் அற்புதன் அவர்களுக்கு வயது 52. ’அற்புதம்’ படத்தை அடுத்து ’மனதோடு மழைக்காலம்’ ’செய்யவே சிறுகாளி’ ஆகிய படங்களையும் இவர் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் சாலை விபத்தில் மரணம் அடைந்த அற்புதன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

நைட்டுக்கு மாயா வேணுமா பிராவோ: பூர்ணிமாவின் அதிர்ச்சி கேள்வி

பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று  பிரதீப் மீது குற்றஞ்சாட்டி வெளியே அனுப்பி வைத்த மாயா மற்றும் பூர்ணிமா குரூப் தற்போது எல்லை மீறி இரட்டை அர்த்தங்களில் ஆண்களிடம் பேசுவது பெரும்

விச்சுவாவது கிச்சுவாவது உனக்கெல்லாம் இனிமேல் மரியாதையே கிடையாது.. பயங்கர கோபத்தில் பூர்ணிமா

விச்சுவாவது கிச்சுவாவது உனக்கெல்லாம் இனிமேல் மரியாதையே கிடையாது என மாயாவிடம் பூர்ணிமா பயங்கர கோபத்துடன் கூறிய காட்சியின் வீடியோ மூன்றாவது புரமோவாக வெளியாகி உள்ளது.

ராஷ்மிகாவின் போலி வீடியோ.. 3 ஆண்டுகள் சிறை.. மத்திய அரசு அதிரடி..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது போன்ற போலி வீடியோக்களை வெளியிட்டால் இனிமேல்

அர்ச்சனாவுக்கு ஆதரவு கொடுத்த முன்னாள் டைட்டில் வின்னர்.. இனிமேல் அவரது ஆர்மி பாத்துக்குவாங்க..!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும்  போட்டியாளர்கள் 18 பேரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கினார்

யாராவது வேணுன்னு செய்வாங்களா, ஆனால் நான் செய்வேன்.. கமலுக்கே குறும்படம் போட்ட பிரதீப்..!

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் அவருக்கு தனது ஸ்டைலில் பிறந்தநாள்