கடவுள் வெளியே இல்லை, அம்மாவிடம் தான் உள்ளார்: ராகவா லாரன்ஸின் அன்னையர் தின வாழ்த்து

  • IndiaGlitz, [Sunday,May 10 2020]

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் டுவிட்டரில் இரண்டுக்கும் மேற்பட்ட அன்னையர் தின ஹேஷ்டேக்குகள் டிரண்டில் உள்ளன. திரையுலகினர், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாழும் அன்னைக்கு கோவில் கட்டி அன்னை பாசத்தை வெளிப்படுத்திய நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள். வாழும் அன்னைக்கு நான் கடந்த நான்கு வருடங்களாக ஆலயம் கட்டி வருகிறேன். உலகில் உள்ள அனைத்து அன்னைகளுக்கும் இந்த கோவிலை அர்ப்பணிக்கின்றேன். நான் பல ஆண்டுகளாக கடவுளை வெளியே தேடினேன். ஆனால் கடவுள் நமது அன்னைக்குள்ளும், பசியுடன் வாழும் ஏழைகளுக்குள்ளும் இருப்பதை கண்டறிந்தேன். எவர் ஒருவர் அன்னையை மகிழ்ச்சியாக வைத்து கொள்கின்றார்களோ, எவர் ஒருவர் ஒரு ஏழையின் பசியை போக்குகின்றார்களோ அவர் தன் வாழ்நாளில் தோல்வியே அடைவதில்லை’ என்று கூறியுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த அன்னையர் தின வாழ்த்து தற்போது வைரலாகி வருகிறது.

More News

மீண்டும் முதலிடத்தை பிடித்த ராயபுரம்: கருஞ்சிவப்பு பகுதியாக அறிவிப்பு

சென்னையில் கடந்த சில வாரங்களாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கடந்த நான்கைந்து நாட்களாக ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு திருவிக நகர் முதலிடத்தை பிடித்தது.

நாங்கள் கொடுத்த புகார் என்ன ஆயிற்று? காசி வழக்கை சுட்டிக்காட்டி சின்மயி கேள்வி

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞன் தன்னை தொழிலதிபர் என்று கூறிக் கொண்டும் வழக்கறிஞர் என்று கூறிக் கொண்டும் விமான ஓட்டுநர் பயிற்சியாளர் என்று கூறிக்கொள்ளும்

மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள்: ரஜினிகாந்த் டுவீட்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கும் நிலையில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே பொதுமக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி

ரஜினி கிண்டல் செய்ததை 36 வருடங்களுக்கு பின் தெரிவித்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை பற்றி தன்னுடைய அம்மாவிடம் கிண்டல் செய்ததை 36 வருடங்கள் கழித்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோயம்பேடு தொடர்பால் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா: எங்கே தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்,