close
Choose your channels

செப்.28ல் படம் ரிலீஸ்.. ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரபலம்..!

Tuesday, September 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடித்த ’சந்திரமுகி 2’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ என்ற திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த ’சந்திரமுகி 2’ படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் அவரது காலில் விழுந்து ஆசை பெற்றார். அவரை கட்டி அணைத்து ’சந்திரமுகி 2’ படத்தின் வெற்றிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த சந்திப்பு குறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது இன்று நான் என் தலைவர் மற்றும் குருவான ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தேன். ’ஜெயிலர்’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்காக அவரை வாழ்த்தியதோடு செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் ’சந்திரமுகி 2’ படத்தின் ரிலீஸுக்கு ஆசியும் பெற்றேன். அவரை சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தலைவர் எப்போதும் பெரியவர். குருவே சரணம் என்று பதிவு செய்துள்ளார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் எம்எம் கீரவாணி இசையில் உருவான இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment