சர்ச்சை கருத்துக்குப்பின் கமலஹாசனை சந்தித்த ராகவா லாரன்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த ’தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும், நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் கமல்ஹாசன் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ராகவா லாரன்ஸ்க்கு கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் இதுகுறித்து ராகவா லாரன்ஸ் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்
இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் அவர்களை சந்தித்து அவரிடம் நேரில் விளக்கம் அளித்ததாகவும் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்து பரப்பப்படுகின்றது என்று நான் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன்
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக் கொண்ட கமலஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியையும் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments