இந்த சந்தோஷம் கோடி ரூபாய் கொடுத்தால் கூட வராது..ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த சந்தோஷம் கோடி ரூபாய் கொடுத்தால் கூட வராது என்று நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் பல சமூக சேவை செய்து வருகிறார் என்பதும் அவரால் ஏகப்பட்ட குழந்தைகள் கல்வி அறிவு பெற்று தற்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அது மட்டும் இன்றி அவரால் உதவி பெற்ற மாணவர்கள் தற்போது நல்ல நிலையில் இருந்து அவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு இதயத்தில் ஓட்டை இருக்கிறது என்பதை கேள்விப்பட்ட ராகவா லாரன்ஸ் அவரை சென்னை அழைத்து வந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூபாய் 15 லட்சம் செலவு செய்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த சிறுவன் வளர்ந்து பெரியவர் ஆகி நல்ல வேலையில் இருக்கும் நிலையில் அவர் தற்போது சில மாற்று திறனாளி மாணவர்களுக்கு நிதி உதவி செய்துள்ளார். இது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ராகவா லாரன்ஸ் ’இந்த சந்தோஷம் கோடி ரூபாய் கொடுத்தால் கூட வராது, சேவையே கடவுள், என்னால் உதவி பெற்ற ஒருவர் தற்போது அவர் தன்னால் முடிந்தவர்களுக்கு உதவி செய்வதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Action speaks louder than words!
— Raghava Lawrence (@offl_Lawrence) April 6, 2024
He’s Sastha, from Kanyakumari, who faced a sudden health crisis at the age of 15. While in school, he experienced severe head pain and collapsed. After being rushed to the hospital, it was discovered that he had a heart condition with holes in… pic.twitter.com/UcKGhKuvID
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments