அரசியல் எண்ட்ரி குறித்த ராகவா லாரன்ஸ் முடிவில் திடீர் மாற்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ், அவருடைய அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றுவது குறித்து தெரிவிப்பதற்காக நாளை செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாக அறிவித்திருந்தார்
இந்த நிலையில் ராகவா லாரன்ஸின் தீவிர ரசிகர் ஒருவர் கடலூரில் மரணம் அடைந்துவிட்டதாக செய்தி கிடைத்திருப்பதை அடுத்து இரண்டு நாள் படப்பிடிப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மறைந்த சேகர் என்ற அந்த ரசிகரின் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், சேகரின் இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டுமின்றி தனக்கும் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு என்று கூறியுள்ள அவர் கடலூருக்கு சென்று அவருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பத்திரிகையாளர் சந்திப்பு வரும் 7ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என்றும், இந்த சந்திப்பில் தனது நிலை குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout