உதவித்தொகை வாங்க நேரில் வரவேண்டாம்: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,May 09 2020]

சமீபத்தில் நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அந்த பணம் தற்போது நடன கலைஞர்கள் யூனியனில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தலா ரூபாய் 5500 என பிரித்துக் கொடுக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்த பணத்தை நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு நேரில் வந்து கையெழுத்திட்டு வாங்கி செல்ல வேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடன யூனியன் உறுப்பினர்களில் சிலர் வெளியூரில் இருப்பதாகவும், உடனடியாக தங்களால் சென்னைக்கு நேரில் வரமுடியாத நிலையில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது

இதனையடுத்து இதன் பிரச்சனையை அறிந்துகொண்ட ராகவா லாரன்ஸ் பணத்தை வினியோகம் செய்யும் தினேஷ் மாஸ்டரிடம் தொடர்புகொண்டு உறுப்பினர்கள் யாரும் நேரில் வரவேண்டாம் என்றும் அனைவருக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்திவிடும்படியும் அறிவித்துள்ளார்

இதனை அடுத்து தினேஷ் மாஸ்டர் பணத்தை உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’நடன யூனியன் உறுப்பினர்கள் யாரும் பணத்தை வாங்க நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும், பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு தானாகவே டெபாசிட் ஆகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ் இந்த உதவிக்கு நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்