காஞ்சனா இந்தி ரீமேக்கில் திடீர் திருப்பம்! ராகவா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Sunday,May 26 2019]

தமிழில் சூப்பர்ஹிட்டான 'காஞ்சனா' திரைப்படத்தை இயக்குனர் ராகவா லாரன்ஸ் இந்தியில் ரீமேக் செய்து கொண்டிருந்தார் என்பதும், 'லட்சுமி பாம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அக்சயகுமார், கைரா அத்வானி, அமிதாப்பச்சன் உள்ளிட்டோர்கள் நடித்து வந்தனர் என்பதும் தெரிந்ததே.

ஆனால் திடீரென தனக்குரிய மரியாதை படக்குழுவினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்த படம் வேறொரு இயக்குனரின் இயக்கத்தில் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி அக்சயகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் தன்னையே அந்த படத்தை இயக்கி கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளரின் குழு ஒன்று இன்று சென்னை வரவிருப்பதாகவும், இந்த பேச்சுவார்த்தையின்போது தனது சுயமரியாதைக்கு மதிப்பளிக்கும் வகையில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டதால் தான் மீண்டும் 'லட்சுமி பாம்' படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும், நல்லது நடக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ளது
 

More News

உறவுக்கார பெண்ணுடன் நிச்சயதார்த்தமா? சிம்பு விளக்கம்

நடிகர் சிம்புவுக்கு அவரது தாயார் உறவுக்கார பெண் ஒருவரை பார்த்துள்ளதாகவும், அந்த பெண்ணுடன் சிம்புவின் திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருப்பதாகவும்

டி.ஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசாவுக்கு புதிய பதவி: விரிவான தகவல்

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. திமுக மட்டுமே 23 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது

இனிமேல் நல்ல காலம்தான்: தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகை பேட்டி!

மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் இந்த மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

டவுட்டே வேணாம், உங்களை பழிவாங்கத்தான் போறேன்: 'கென்னடி கிளப்' டீசர் விமர்சனம்

'கனா' திரைப்படத்தின் வெற்றி, விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்களை குறிப்பாக பெண்கள் விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இயக்க பலர் முன்வந்துள்ளனர்.

ஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா? கன்னியாகுமரி எம்பி அதிர்ச்சி

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தியவர் எச்.வசந்தகுமார்.