ஒரே நாளில் 2 படங்கள் அறிவிப்பு.. இரண்டும் சொந்த படங்கள்: ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நாளை இரண்டு புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட போவதாகவும் இரண்டுமே அவரது சொந்த தயாரிப்பு என்றும் அறிவித்துள்ளதை அடுத்து அவரது அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த் நடித்த ’உழைப்பாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ், அதன் பிறகு பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தார். அதன் பின்னர் நடிகராக மாறிய ராகவா லாரன்ஸ் சில படங்களை இயக்கினார் என்பதும் குறிப்பாக ’முனி’ ’காஞ்சனா’ உள்பட சில வெற்றி படங்களை அவர் இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் ராகவேந்திரா புரடொக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ் அதன் மூலம் ’காஞ்சனா’ ‘காஞ்சனா 2’ ’காஞ்சனா 3’ உள்பட சில படங்களை தயாரித்துள்ளார். இந்த படங்களை அவர் இயக்கியதோடு, ஹீரோவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது ராகவா ராகவேந்திரா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இரண்டு புதிய படங்களை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படங்களின் அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு படங்கள் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் அவர் கேபிஒய் பாலா ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறிய நிலையில் அந்த படத்தின் அறிவிப்பு நாளை வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.