தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு உதவி: பிரபல நடிகர், இயக்குனர் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான தீப்பெட்டி கணேசன் உடல்நல கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து திரையுலகினர் அவருடைய குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் தீப்பெட்டி கணேசன் வீட்டிற்கு நேரடியாக சென்று மலரஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீப்பெட்டி கணேசன் குடும்பம் ஏற்கனவே வறுமையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவரது குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்து இருந்தார் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது தீப்பெட்டி கணேசன் காலமான நிலையில் மேலும் சில உதவிகளை செய்வதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டேன். இனிவரும் காலத்திலும் என்னால் இயன்ற அளவு உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Brother, I will take care of your children’s. Rest in peace ?? pic.twitter.com/EaBsblZiMl
— Raghava Lawrence (@offl_Lawrence) March 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments