ராயபுரம் ஹோமில் 42 குழந்தைகளுக்கு கொரோனா: ராகவா லாரன்ஸ் உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என கோடிக்கணக்கில் தனது சொந்த பணத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்து உதவி செய்து வருகிறார் என்பது தெரிந்தே.
இந்த நிலையில் அவர் நடத்தி வந்த குழந்தைகள் காப்பகத்தில் திடீரென ஒரு சில குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் தீவிர சிகிச்சை காரணமாக குணமடைந்து மீண்டும் காப்பகத்திற்கு திரும்பினர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது ராயபுரம் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 42 குழந்தைகளுக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்டதிலிருந்து தான் மிகவும் வருத்தத்துடன் இருப்பதாகவும் அந்த காப்பகங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தனது குழந்தை போல் எண்ணி அவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு தேவை என்றும் தன்னால் முடிந்த உதவியை மாவட்ட குழந்தைகள் காப்பக அதிகாரி சூரியகலா மேடம் அவர்கள் மூலம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதே போல் மற்றவர்களும் அந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாக ராகவா லாரன்ஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
On this Thursday I pray ragavendra swamy for the recovery of corona affected boys from government children home ?? pic.twitter.com/pCYc5aXxZr
— Raghava Lawrence (@offl_Lawrence) June 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments