'ஜெய்பீம்' ராசாக்கண்ணுவின் மனைவிக்கு ராகவா லாரன்ஸ் செய்யும் மிகப்பெரிய உதவி!

  • IndiaGlitz, [Monday,November 08 2021]

சமீபத்தில் வெளியான சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் நிஜ கதையை தழுவி உருவாக்கப்பட்டது என்பதும் இந்த படத்தில் வரும் ராசாக்கண்ணுவின் உண்மையான மனைவி பார்வதி அவர்கள் தற்போது வாழ்ந்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் போலீசாரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடுமைக்கு உள்ளான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அவர்களுக்கு ராகவா லாரன்ஸ் உதவி செய்ய முன் வந்துள்ளதாக அறிவித்துள்ளார். செய்யாத குற்றத்திற்காக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய நிலையை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன் என்றும், பார்வதி அம்மாள் அவர்களுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டி கொடுப்பதாக உறுதி அளிக்கிறேன் என்றும் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையை எனது கவனத்திற்கு கொண்டு வந்தவர்களுக்கு எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசு பொருளாக்கிய ’ஜெய்பீம்’ படக்குழுவினருக்கும் ’ஜெய்பீம்’ படத்தை ஒரு உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா அவர்களுக்கும் ஜோதிகா அவர்களுக்கும் இயக்குனர் ஞானவேல் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

More News

'மாறன்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி 'மாறன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து

இந்தியாவை கழற்றிவிட்டு, அரைஇறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் “கோப்பை“ எங்களுக்குத்தான் என்று உற்சாகத்துடன் களம் இறங்கிய இந்திய அணி தற்போது

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.

கனமழை எதிரொலி: சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்!

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

வடகிழக்கு பருவமழை மாற்றம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்