ராகவா லாரன்ஸ் உதவியால் கொரோனா பாதித்த பெண்ணுக்கு நடந்த பிரசவம்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் 4 கோடிக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி அரிசிகள் உள்பட ஏராளமான பொருட்களையும் ஏழை எளிய மக்களுக்கு அவர் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா பாதித்த பெண் ஒருவர் முழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு நல்லபடியாக பிரசவம் நடக்க ராகவா லாரன்ஸ் உதவிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலை பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு நபர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் 9 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்குப் பிரசவம் நடக்கும் நிலையில் நிலையில் இருந்தார். எனவே அவரது கணவரும், மாமனாரும் என்னை அலைபேசியில் அழைத்து மருத்துவமனைக்குச் செல்ல உதவி கேட்டார்கள்.

இத்தகவலை நான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாரின் பி.ஏ.வான ரவி சாருக்குத் தெரிவித்தேன்! அவர் அவசரம் கருதி சம்பந்தப்பட்ட நண்பரின் இல்லத்திற்கே நேரில் சென்று, அந்த கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துப்போய் கீழ்பாக்கம் கே.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தார்.

அப்பெண் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த மருத்துவர்கள், உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை செய்து தாயையும் குழந்தையையும் வெற்றிகரமாகக் காப்பாற்றினர். இந்தப் பிரசவத்தில் அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையும் நலமாக உள்ளது.

அப்பெண் கரோனாவிலிருந்து கூடிய விரைவில் குணமடைவார் என்று மருத்துவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளனர். இந்த நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார் மற்றும் அவரது பி.ஏ. ரவி சாருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் மருத்துவர்கள் டாக்டர் ஜானகி, டாக்டர்.ஐஸ்வர்யா, டாக்டர் மது, டாக்டர் சாந்தி, டாக்டர் லாவண்யா ஆகிய அனைவரும் கடவுளுக்குச் சமமானவர்கள். அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் படிக்கும் ஒவ்வொருவரும், தயவுசெய்து அப்பெண் கரோனாவிலிருந்து சீக்கிரமே குணமடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள். சேவையே கடவுள்!.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

More News

ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு

ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூடியது

எத்தனை கோடி கொடுத்தாலும் வேண்டாம்: தளபதி விஜய் உறுதி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 9ம் தேதியே ரிலீசாக வேண்டிய நிலையில் தற்போதைய கொரோனா பாதிப்பு காரணமாக

மீண்டும் முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பால் பரபரப்பு

ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்காக சென்னை உள்பட 5 மாவட்டங்களில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது என்பதும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பால்,

கொரோனா பீதியில் சுரங்கம் தோண்டி தப்பிக்க முயன்ற சிறை கைதிகள்!!!

கொரோனா பரவல் உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் சிறை கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற பதட்டம் நிலவிவருகிறது.

வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வரும் நிலையில் கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களில் சமூக விலகலை கடைபிடிக்காததால்