என் அம்மாவை அடுத்து எனக்கு நீங்கள் தான் முக்கியம்: நெகிழ்ச்சியுடன் பேசிய ராகவா லாரன்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசிய போது என் அம்மாவை எடுத்து நீங்கள் தான் என்று நிகழ்ச்சியுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளத்தில் ’என்னுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம், நானே உங்களை தேடி வருகிறேன் என்றும் அறிவித்திருந்தார்.
முதல் கட்டமாக விழுப்புரம் வர இருப்பதாக தேதி மற்றும் இடத்தை குறிப்பிட்டு இருந்த ராகவா லாரன்ஸ் நேற்று சொன்னபடி விழுப்புரத்தில் ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ராகவா லாரன்ஸ் அதன்பிறகு பேசிய போது ’எனக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன், உங்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது எனக்கு திருப்தியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
மேலும் என் அம்மாவுக்கு பிறகு ரசிகர்களாகிய உங்களைத்தான் நான் பெரிதாக கருதுகிறேன், உங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன், அடிக்கடி பயணம் செய்து ரசிகர்கள் அனைவரையும் சந்திப்பேன், எனக்காக யாரும் சென்னை வர வேண்டாம், நானே உங்களை தேடி வருகிறேன்’ என்று கூறினார். ராகவா லாரன்ஸ் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Hi Everyone, I'm extremely happy today by the warm welcome and love I received from fans at Villupuram fans meet photoshoot today. I always mention that After my mother, I consider my fan’s love as the greatest and you all proved that today. Hereafter, I will travel and meet… pic.twitter.com/d4vlzMMpFZ
— Raghava Lawrence (@offl_Lawrence) February 25, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments