நானும் மாஸ்டர் போட்ட விதைதான்.. கல்லூரி பெண்களின் எமோஷனல் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,April 26 2024]

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்துள்ளார் என்பதும் அந்த குழந்தைகள் தற்போது பெரியவர்களாகிய நல்ல நிலையில் இருக்கும் நிலையில் அவர்கள் பலருக்கும் உதவி செய்து வரும் வீடியோவை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ராகவா லாரன்ஸ் வரும் மே 1ஆம் தேதி முதல் மாற்றம் என்ற அமைப்பை தொடங்கி அதில் தன்னால் வளர்ச்சி அடைந்தவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யும் பணியை தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே ராகவா லாரன்ஸ் உதவியால் வளர்ந்த ஆண்கள் சிலர் தாங்கள் மாஸ்டர் போட்ட விதை என்று கூறி தங்களால் முடிந்த உதவி செய்ய உதவியை செய்ய போவதாக அறிவித்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் மாஸ்டரால் உதவி பெற்ற பெண்களும் இந்த மாற்றம் என்ற அமைப்பில் இணைந்து உதவி செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்

பெரும்பாலும் கல்லூரி மாணவிகளாக இருக்கும் அவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யப்போவதாகவும் தங்களை போலவே கஷ்டப்படும் குழந்தைகள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் தங்கள் எண்ணம் என்றும் கூறியிருப்பது எமோஷனலாக உள்ளது.

இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள ராகவா லாரன்ஸ் ’பசிக்கு உணவும், வாழ்க்கைக்கு படிப்பும் கொடுத்துவிட்டால், எந்த குழந்தைகளும் கஷ்டப்படப் போவதில்லை, அவர்கள் வாழ்க்கையை அவர்களே பார்த்து கொள்வார்கள். ஆனால் நான் வளர்த்த குழந்தைகள் அவங்க வாழ்க்கையை மட்டுமின்றி, நாங்கள் வளர்ந்து வந்த பிறகு மற்றவர்களையும் வளர்த்து விடுவோம் என்று கூறும் குழந்தைகளாக வளர்ந்துள்ளனர்’ என்று பெருமையுடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.