ராகவா லாரன்ஸ் அளித்த அடுத்த ரூ.15 லட்சம்: யாருக்கு தெரியுமா?

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 3 கோடி அளித்தார் என்பது தெரிந்ததே. இதில் 50 லட்சம் மத்திய அரசு நிவாரண பணிக்கும், 50 லட்சம் மாநில அரசு நிவாரண பணிக்கும், 50 லட்சம் பெப்சி அமைப்புக்கும், 50 லட்சம் நடன இயக்குனர் அமைப்புக்கும், 25 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், 75 இலட்சம் ராயபுரம் பகுதி தினக்கூலி மக்களுக்கும் அளித்தார் என்பது தெரிந்ததே.

அதுமட்டுமின்றி சமீபத்திய அவர் தூய்மைப் பணியாளருக்கு ரூபாய் 25 லட்சம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் கதிரேசன் மூலம் இந்த பணம் தூய்மைப்பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் மேலும் 15 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். இம்முறை அவர் சென்னை செங்கல்பட்டு மாவட்டம் விநியோகிஸ்தர் சங்கத்தினர் நலனுக்காக அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணத்தை அவர் சென்னை-செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் டி ராஜேந்தர் அவர்களிடம் அளித்துள்ளார். இதற்கு டி ராஜேந்தர் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சிறந்த மனிதர்: ரக்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஜாக்குலின்

விஜய் டிவியில் பார்வையாளர்களால் பெரும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் ரக்சன் மற்றும் ஜாக்குலின் என்பது தெரிந்ததே

போலீஸ் கெடுபிடியால் 65 வயது தந்தையை 1 கிமீ தோளில் தூக்கி சென்ற மகன்: நெகிழ்ச்சி வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை இருக்கும் என்றும் இந்த முறை ஊரடங்கு உத்தரவை கடுமையாக

கொரோனா பலியில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் அமெரிக்கா!!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உலகச்சுகாதார அமைப்பு எப்படி செயல்படுகிறது??? கொரோனாவில் இதன் பங்கு!!!

கொரோனா நோய்த்தொற்றுப் பற்றிய விவரங்களை சீனா பொதுவெளியில் மறைத்துவிட்டதாகவும்

இந்த விடுமுறையில் பிரபல நடிகைகள் அனைவரும் பார்த்த ஒரே படம் இதுதான்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள 140 கோடி மக்கள் வீட்டில் சும்மா உள்ளனர்.