50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம்: ராகவா லாரன்ஸின் அடுத்த நிதியுதவி

ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் பொதுமக்களுக்கும் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூபாய் ரூ.4 கோடிக்கு மேல் நிதியுதவி என்பதும் அதுமட்டுமின்றி ஏராளமான பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்பட பொருளுதவியும் செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் அவரது வள்ளல் தன்மை இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சற்றுமுன் வந்த தகவலின்படி மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரத்தை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக ராகவா லாரன்ஸ் டெபாசிட் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆரோக்கியமாக இருக்கும் பொது மக்களே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மாற்று திறனாளிகள் படும் கஷ்டத்தை கூற வேண்டிய அவசியமே இல்லை. இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் 50 மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு முதல் கட்டமாக ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார். இந்த பணத்தை அவர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 50 பேர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என்றால் அவர் மொத்தம் 12.5 லட்ச ரூபாய் அனுப்பியுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. இந்த பணத்தை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் தற்போது ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.