புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகள்: பிரபல நடிகர் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கஜா புயலினால் பாதிப்பு அடைந்த டெல்டா பகுதி மக்களுக்கு திரையுலகினர் அளித்து வரும் உதவி மிகப்பெரிய அளவில் உள்ளது. கோடிகளிலும் லட்சங்களிலும் திரையுலகினர் செய்யும் உதவியினால் டெல்டா மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு சுமார் 50 வீடுகளை கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளேன். உங்கள் எல்லோருடைய ஆசர்வாதம் தேவை....!
கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்..
எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களுக்கும் அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலை வணங்குகிறேன்...
ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்கதியாய் ஒரு குடும்பம் பற்றி பார்த்தேன். வேதனை அடைந்து விட்டேன்... அந்த குடிசை வீடு அழகாக கட்டித்தர எவ்வளவு ஆகும்..மிஞ்சி போனால் ஒரு லட்சம் ஆகும்...
அந்த வீடு மட்டுமில்லை ..இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப் பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன்...அப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்...
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள் ...நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.. ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்..
அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்...உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்..
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments