ரஜினி இதை செய்தால் மட்டுமே அவரது கட்சியில் சேருவேன்: ராகவா லாரன்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சியில் இணைவேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து தற்போது மீண்டும் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
சமீபத்தில் நான் ரஜினிகாந்த் அவர்கள் கட்சியில் இணைந்து சேவை செய்வேன் என்று கூறியவுடன் என்னுடைய நண்பர்கள் சிலர் ஒரு கேள்வியை எழுப்பினார்கள். ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று அவரே அறிவித்துள்ள நிலையில் அவருடைய கட்சிக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு தருவீர்களா அல்லது வேறு ஒருவர் முதல்வராக இருந்தாலும் அவரது கட்சியில் இணைந்து சேவை செய்வீர்களா என்று கேட்டுள்ளனர்.
இதுகுறித்து நான் தற்போது ஒரு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். நான் மட்டுமல்ல அனைத்து ரஜினியின் ரசிகர்களும் அவர் தான் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட நான் அவரிடம் தொலைபேசியில் பேசும்போது முதல்வர் வேட்பாளராக நீங்கள்தான் இருக்கவேண்டும் என்று பேசினேன். இதனை நான் தொடர்ந்து அவரை வலியுறுத்தி வருகிறேன். ஒருவேளை அவர் இதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நான் எப்பொழுதும் போல் என்னுடைய பணியை செய்து வருவேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் வைக்கும் ஒரு வேண்டுகோள் என்னவெனில் அவர் தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டும். எதிர்காலத்தில் வேண்டுமானால் அவர் கை காட்டும் ஒருவருக்கு நாங்கள் ஆதரவு கொடுக்க தயார். ஆனால் இந்த முறை அவர் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதை நான் ஒரு ரசிகனாக அவருடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறினார்.
மேலும் நீங்க வந்தா நாங்க வருவோம், இப்ப இல்லை நான் வேற எப்போ? என்று அவர் தெரிவித்துள்ளார்.
I request Thalaivar to reconsider his decision.????????????@rajinikanth pic.twitter.com/3rvAUhJJEs
— Raghava Lawrence (@offl_Lawrence) September 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com