கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு பிரபல நடிகர் பாராட்டு

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பிரபல நடிகரும் இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:

இன்று உலகையே பெரிதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் முழுமையாய் பரவி விடாமல் இருக்க, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துரிதமாகவும் மிகத் தீவிரமாகவும் எடுத்து, கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திடுவதற்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தமிழக முதல்வர் மாண்புமிகு திரு எடப்பாடி பழனிச்சாமி சார் அவர்களுக்கும், , மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் சார் அவர்களுக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள்!

பொதுவாக ஒரு விஷயத்தில் அரசு சரியாக நடவடிக்கை எடுக்காத பொழுது, எப்படி தட்டிக் கேட்கிற உரிமை நமக்கு இருக்கிறதோ, அதேபோல, ஒரு விஷயத்தில் அரசு சரியாக செயல்படுகிற போது
பாராட்ட வேண்டியதும் நமது கடமை!

தமிழக அரசை பாராட்டுகிற அதே சமயம், பொதுமக்களாகிய நாமும் அரசு எடுத்துக் கூறி வருகிற, சுகாதார பாதுகாப்பு முறைகளை கவனத்துடன் கடைப்பிடிப்போம்! உயிர் நலன் காப்போம்!

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

 

More News

அடுத்து வரவிருக்கும்‌ 2 வாரங்கள்‌ மிக முக்கியமானது: கமல்ஹாசன் அறிக்கை

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது குறித்தும் அதனை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமி ஏற்படும்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரங்கராஜ் பாண்டே அவர்களின் சாணக்கியா சேனல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

இந்த வாரம் வெள்ளியன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகுமா?

கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகம் முழுவதும் ஷாப்பிங் மால்கள் திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் திரையரங்குகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் எதிரொலி: இன்று ஒரே நாளில் 6 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்த இந்தியர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்திய பங்குசந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

மற்றோர் பேராபத்து!!! 1990 களை விட 6 மடங்கு அதிகமாக உருகும் துருவப் பனிக்கட்டிகள்!!!

உலகம் முழுக்க தற்போது கொரோனா பற்றிய பாதிப்புகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.