'தர்பார்' பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராகவா லாரன்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசிய போது சிறுவயதில் கமல் போஸ்டர் மீது சாணி அடித்ததாக தெரிவித்திருந்தார். இதற்கு கமல் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்.
தர்பார் ஆடியோ விழாவில் நான் கமல் அவர்களின் போஸ்டர் மீது சாணி அடித்தது குறித்த பேச்சுக்கு ஒரு சிலர் என்னை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். வீடிவை நான் பேசிய முழு வீடியோவையும் பார்த்தால் நான் என்ன பேசினேன் என்பது அனைவருக்கும் புரியும். சிறுவயதில் ரஜினி அவர்களின் தீவிர ரசிகராக இருந்த போதும் அறியாமல் செய்த ஒரு நிகழ்வு தான் அந்தச் ஆணி அடித்தது.
அதன் பிறகு நான் திரையுலகுக்கு வந்த பிறகு கமல் அவர்களின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கின்றேன். அவருடன் கைகோர்த்து நடப்பதை நான் பெருமையுடன் நினைக்கிறேன். அப்படி இருந்தும் என்னுடைய பேச்சில் கமல் ரசிகர்கள் யாராவது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனாலும் என்னுடைய முழு வீடியோவையும் பார்த்தால் நான் தவறாக எதுவும் பேசவில்லை என்பது அனைவருக்கும் புரியும்.
ஒரு சிலர் மட்டுமே திட்டமிட்டு இதனை எதிர்மறையாக பரப்பி வருகிறார்கள். நான் கமல் அவர்கள் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். இதை நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தயவு செய்து நான் பேசிய முழு வீடியோவையும் பாருங்கள் என்று ராகவா லாரன்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Watch the full video of My speech at Darbar audio launchhttps://t.co/PdvI3FZ2YR pic.twitter.com/7eOJH5Zag5
— Raghava Lawrence (@offl_Lawrence) December 7, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout