ராகவா லாரன்ஸின் 5 மணி அறிவிப்பு இதுதான்

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூபாய் 3 கோடி அளித்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த 3 கோடியில் 50 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் பெப்சி அமைப்புக்கும், 5 லட்சம் நடன இயக்குனர் சங்கத்திற்கும், 25 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், தான் பிறந்து வளர்ந்த ராயபுரம் பகுதி மக்களுக்கு ரூபாய் 75 லட்சமும் அவர் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மேலும் பலர் தன்னிடம் தொலைபேசி மூலம் நிதிஉதவி கேட்டதாக இன்று காலை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்த அறிவிப்பை தனது ஆடிட்டருடன் கலந்து ஆலோசித்து இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று மாலை 5 மணிக்கு எனது அடுத்த நிதியுதவி குறித்த தகவலை தெரிவிப்பதாக கூறியிருந்தேன். இதுகுறித்து நான் எனது ஆடிட்டரிடம் கலந்து ஆலோசித்த போது அவர் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். எனவே எனது அடுத்த நிதியுதவி குறித்த அறிவிப்பை வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.