சொந்த வீடு, தங்கக்காசு: ஜல்லிக்கட்டு பரிசுகள் குறித்த அறிவிப்பு வெளியிட்ட பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்க காசு பரிசாக கொடுக்க முடிவு செய்துள்ளதாக நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்: இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழனின் வீர அடையாளமான இந்த ஜல்லிக்கட்டு காட்சிகளை பார்க்கும்பொழுது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக உணர்வுரீதியாக போராடியதையும், பல அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாக போராடி வெற்றி பெற்றதையும், இந்த மாபெரும் நிகழ்வில் என்னுடைய சிறு பங்கு இருந்ததையும் நினைத்து பார்க்கிறேன்.
போராட்டத்தின் போது ரயில் மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்தின் விருப்பத்திற்காக ஒரு மகன் என்ற நிலையில் இருந்து ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன். அதோடு இல்லாமல் யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிவரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் இனிமேல் ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன்
இதுவரை தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட திருநாவுக்கரசு, விஜய், கார்த்திக், கண்ணன் ஆகியோருக்கும் மற்றும் சிறந்த காளைகளுக்காக பரிசுகள் வாங்கிய சந்தோஷ், ஜி. ஆர். கார்த்திக் ஆகியோருக்கும் மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும், இனிமேல் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறப்போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜல்லிகட்டு வீரர்களுக்கு “மறைந்த யோகேஸ்வரன்” நினைவாக தங்க காசு!!! #serviceisgod pic.twitter.com/wluqDPdlKo
— Raghava Lawrence (@offl_Lawrence) January 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com