'காஞ்சனா' இந்தி ரீமேக்: ராகவா லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
காஞ்சனா தமிழ் படத்தின் இந்தி ரீமேக் திரைப்படமான 'லட்சுமிபாம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. அக்சயகுமார், கைரா அத்வானி, அமிதாப்பச்சன் உள்பட பலர் நடித்து வந்த இந்த படத்தில் இருந்து திடீரென ராகவா லாரன்ஸ் விலகினார்.
இந்த நிலையில் படக்குழுவினர் மீண்டும் ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் இந்த படத்தை தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும், தன்னுடைய மரியாதைக்கும் படைப்பு சுதந்திரத்திற்கும் பிரச்சனை இல்லாமல் இருந்தால் தான் அந்த படத்தை தொடர்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் படக்குழுவினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இந்த படத்தில் தான் மீண்டும் இணைவதாகவும், தனது உணர்வுகளை புரிந்து கொண்ட அக்சயகுமார் மற்றும் தயாரிப்பாளருக்கு தனது நன்றி என்றும் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மீண்டும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் இந்த படம் திட்டமிட்டபடி தொடங்கவுள்ளது.
Hi Dear Friends and Fans...!
— Raghava Lawrence (@offl_Lawrence) June 1, 2019
As you wished I would like to let you know that I am back on board as a director of #LaxmmiBomb with @akshaykumar pic.twitter.com/9HRHF5y2VV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments