என் டிரஸ்ட்டுக்கு இனிமேல் யாரும் பணம் அனுப்ப வேண்டாம்: ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் ’இனிமேல் எனது டிரஸ்ட்டுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம்’ என்று வீடியோ ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு டிவிட் ஒன்றை வெளியிட்டு இருந்தேன். அதில் என்னுடைய டிரஸ்ட்டுக்கு யாரும் இனி பணம் அனுப்ப வேண்டாம் என்றும் என்னுடைய குழந்தைகளின் நலனை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.
நான் டான்ஸ் மாஸ்டராக இருந்தபோது குழந்தைகளுக்கு என்னால் பெரிய அளவில் உதவி செய்ய முடியவில்லை அதனால் தான் நான் பிறருடைய உதவியை கேட்டேன். ஆனால் தற்போது நான் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடித்து வருகிறேன், ஓரளவுக்கு பணம் வருகிறது. எனவே இனிமேல் எதற்காக மற்றவர்களிடம் குழந்தைகளுக்காக பணம் வாங்க வேண்டும் என்று எனக்குள்ளே கேள்வி எழுந்தது. எனக்கு நன்றாக பணம் வரும் நானே அதை செய்யலாம் என முடிவு செய்தேன்
நான் பணம் வேண்டாம் என்று ஆணவமாக சொல்லவில்லை, எனக்கு கொடுக்க நினைக்கும் பணத்தை உங்கள் வீட்டின் அருகில் குழந்தைகள் யாராவது கஷ்டப்பட்டால் அவர்களுக்கு கொடுங்கள். என்னை போல் நிறைய டிரஸ்ட் வைத்து குழந்தைகளை வளர்த்து வருபவர்களுக்கு கொடுங்கள், அவ்வாறு நீங்கள் செய்தால் அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
Hi Friends & Fans, This is my small request for you all. Watch this Video👇🏻#service is God 🙏🙏 pic.twitter.com/QB24RL8oNt
— Raghava Lawrence (@offl_Lawrence) August 29, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout