ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' ரிலீஸ் தேதி மாற்றம்: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,September 27 2022]

பிரபல நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ருத்ரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ’ருத்ரன்’ படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கள் நிறுவனத்தின் வெற்றி படைப்புகளான பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா, டைரி பட வரிசையில் அடுத்து வருவது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ’ருத்ரன்’ திரைப்படம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
'காஞ்சனா’ திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படம் ’ருத்ரன்’ என்பதால் ராகவா லாரன்ஸ் அவர்களின் ரசிகர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை முழு திருப்திபடுத்தும் விதமாக படத்தின் நிறைவு பணிகள் நடைபெற்று வருகிறது.

’ருத்ரன்’ திரைப்படம் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிட ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைய சில மாதங்கள் தேவைப்படுவதால் ராகவா லாரன்ஸ் நடிப்பில் மாபெரும் வெற்றி கண்ட ’காஞ்சனா’ படம் வெளியான ஏப்ரல் மாதத்தில் அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ’ருத்ரன்’ திரைப்படம் வெளியாகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இறைவன் அருளுடன் ரசிகர்கள் மக்கள் ஊடகங்கள் ஆதரவுடன் ஏப்ரல் மாதத்தில் வெற்றி வாகை சூட வாழ்த்துமாறு வேண்டிக்கொள்கிறேன் என தயாரிப்பாளர் கதிரேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்