மீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் இணையும் ராய்லட்சுமி
- IndiaGlitz, [Monday,May 02 2016]
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'காஞ்சனா' படத்தின் நாயகியாக நடித்த ராய்லட்சுமி, தற்போது மீண்டும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் இணையவுள்ளாராம். ஆனால் இந்த முறை அவர் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் ராய்லட்சுமி ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தபோதிலும், தமிழில் ஒரே ஒரு பாடலுக்கு அவர் நடனமாடுவது இதுவே முதல்முறை
மே இரண்டாவது வாரத்தில் இந்த பாடலின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், இந்த பாடலுக்கான வித்தியாசமான டான்ஸ் ஸ்டெப்ஸ்களை தற்போது அவர் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், சதீஷ், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய்ரமணி இயக்கி வருகிறார். ஆர்.பி.செளத்ரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.