ராகவா லாரன்ஸை வேற லெவலில் மாற்றியவர் இவர்தான்: எதற்கு மாறினார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் திடீரென தனது உடல் எடையை அதிகரித்து கம்பீரமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்த மாற்றத்திற்கு காரணம் இவர்தான் என புகைப்படம் ஒன்றை ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படங்களில் ஒன்று ’சந்திரமுகி 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்திற்காக இயக்குநர் பி வாசுவின் அறிவுரைக்கு ஏற்ப உடல் எடையை ஏற்றி உள்ளார். இதற்காக அவர் சிவா என்ற உடற்பயிற்சி மாஸ்டரின் அறிவுரைப்படி உடற்பயிற்சி செய்த நிலையில் தற்போது அவர் வேற லெவலில் மாறியுள்ளார்
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் சிவா மாஸ்டர் தான் என்றும் அவருக்கு தனது நன்றி என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் ’சந்திரமுகி 2’ படத்திற்காக இந்த உடல் எடை மாற்றம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன், விக்ரம் போன்ற நடிகர்கள் கேரக்டருக்காக உடல் எடையை கூட்டியும் குறைத்தும் வருவார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அந்த பட்டியலில் தற்போது ராகவா லாரன்ஸ் அவர்களும் இணைந்து உள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ’சந்திரமுகி 2’ படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தை இயக்கிய பி. வாசு இந்த படத்தை இயக்கி வருகிறார். பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மரகதமணி இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டாதரணி கலை இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
Hi everyone, Thanks for all your wishes on my body transformation. All credits go to my Trainer Siva master. Thank you, master. Love you ??
— Raghava Lawrence (@offl_Lawrence) September 14, 2022
If anyone wants to start your fitness journey, Reach out to him @SivaWorldgym pic.twitter.com/WVRJdP8rBy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com