மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம்: பிரபல நடிகரின் புதிய முயற்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
மதச்சார்பின்மை குறித்து பொது மேடையில் அரசியல்வாதிகள் பேசினாலும் உண்மையில் மத கலவரத்தை தூண்டிவிட்டு அதில் அரசியல் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள் தான் இந்தியாவில் அதிகம் என்பது அனைவருடைய கருத்தாக இருக்கிறது
இந்த நிலையில் உண்மையான மதச் சார்பின்மையை நிரூபிக்கும் வகையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு மிகப்பெரிய செயலை செய்ய உள்ளார்
இந்தியாவில் உள்ள மூன்று முக்கிய மதங்களான இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ ஆகிய மூன்று மதங்களுக்கான ஒரு ஆலயம் ஒரே இடத்தில் கட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளார். அவருடைய இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஒரே ஆலயத்தில் மூன்று மதங்களும் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக இருந்து அவரவர் தெய்வங்களை கும்பிட்டு உண்மையான மதச் சார்பின்மையை நிரூபிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படி ஒரு கோவில் உலகிற்கே வழிகாட்டியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அன்னைக்கு கோயில் எழுப்பி உள்ளார் என்பது தெரிந்ததே
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments