ராகவா லாரன்ஸின் முதல் முயற்சி

  • IndiaGlitz, [Friday,March 25 2016]
'காஞ்சனா 2' என்ற சூப்பர் ஹிட் படத்தை அடுத்து தற்போது ராகவா லாரன்ஸ் 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் முதன்முதலாக ராகவா லாரன்ஸ் ஒரு பாடலை பாடியுள்ளார். 'லோக்கல் மாஸ்' என்று தொடங்கும் ஒரு பாடலை ராகவா லாரன்ஸ் பாடகி சுசித்ராவுடன் இணைந்து பாடியுள்ளார். இதே பாடலை திப்பு மற்றும் மாலதி ஆகியோர் பாஸ்ட் பீட்டில் பாடியுள்ளதாகவும், இந்த இரண்டு பாடல்களும் சிங்கிள் டிராக்காக வரும் ஞாயிறு அன்று வெளியாகவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிங்கிள் டிராக் மட்டுமின்றி அன்றைய தினமே இந்த படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகிறது. ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், வம்சி கிருஷ்ணா, ஜெயப்பிரகாஷ், சதீஷ், ஸ்ரீமான், கோவை சரளா, தேவதர்ஷினி, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய்ரமணி இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அம்ரீஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்,.