எமோஷனலாக என்னை டச் செய்துவிட்டது: சமீபத்தில் வெளியான படம் குறித்து ராகவா லாரன்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான படம் குறித்து நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறிய போது இந்த படம் தன்னை எமோஷனலாக டச் செய்து விட்டது என்றார்.
நடிகர் கவின், நடிகை அபர்ணா தாஸ் நடித்த ’டாடா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வசூலிலும் திருப்திகரமாக உள்ளது.
இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் சூரி உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இந்த படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறிய போது, ‘டாடா’ படத்தை பார்த்தேன், எமோஷனலாக என்னை இந்த படம் டச் செய்துவிட்டது, இது ஒரு பக்காவான குடும்ப செண்டிமெண்ட் படம், அனைவரும் தியேட்டரில் பாருங்கள்.
இந்த படத்தை தயாரித்த அம்பேத்குமாருக்கு எனது வாழ்த்துக்கள். சிறப்பாக திரைக்கதை எழுதி ரசிகர்களின் பாராட்டை பெற்ற இயக்குனர் கணேஷ் பாபுவுக்கும் கவின் மற்றும் அபர்ணாவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
I watched dada movie and I’m emotionally touched. A perfect family film for everyone to watch at the theatres. My best wishes to producer @ambethkumarmla sir. A well written and executed film by director @ganeshkbabu! Great performances by @Kavin_m_0431 @aparnaDasss 💐💐
— Raghava Lawrence (@offl_Lawrence) February 16, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments