ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் இயக்குனரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ’ருத்ரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் சற்று முன் வெளியிட்டுள்ளனர். ’ருத்ரன்’ படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில், கருணாகரன் பாடல் வரிகளில், திவாகர் குரலில் உருவாகியுள்ள ’பகைமூடி’ என்று தொடங்கும் இந்த பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மாஸ் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
After mega blockbuster #Kanchana ; @offl_Lawrence
— Diamond Babu (@idiamondbabu) March 13, 2023
Master & @realsarathkumar
combo together on Big screens After 12 Years😎🥳
Electrifying Second Single from #Rudhran - #PagaiMudi song will be out tomorrow 🥵🔥
A @gvprakash
Musical🥁@FilmNews24x7 pic.twitter.com/y6kgH91mcX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments