விஜயகாந்த் மகனுக்கு இந்த உதவியை செய்ய தயார்: ராகவா லாரன்ஸ் வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜயகாந்த் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவருடைய மகனுக்கு உதவி செய்ய தயார் என்று வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் அவருடைய சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’விஜயகாந்த் அவர்கள் ஏராளமான நபர்களுக்கு பல உதவிகளை செய்து உள்ளார். அப்படிப்பட்ட மனிதரின் குடும்பத்திற்கு நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
குறிப்பாக விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படம் ரிலீஸ் ஆகும் போது அவரது படத்தை பிரபலப்படுத்த விரும்புகிறேன். ஒருவேளை படக்குழு ஒப்புக்கொண்டால் சண்முக பாண்டியன் படத்தில் நானும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுக்க தயாராக இருக்கிறேன். அதுமட்டுமின்றி அவரும் நானும் சேர்ந்து நடிப்பது போன்ற டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தாலும் அவருடன் இணைந்து நடிப்பேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அரசியலில் இருக்கும் விஜய் பிரபாகரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
I’m happy to share with you all that I’m ready to do a cameo role in captain sir’s Son Shanmuga Pandian’s movie as my respect and love for Vijayakanth sir 🙏🏼 pic.twitter.com/zIlNBqnVs2
— Raghava Lawrence (@offl_Lawrence) January 10, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments