ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' சென்சார் தகவல்.. ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

  • IndiaGlitz, [Friday,April 07 2023]

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘ருத்ரன்’ என்ற படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ரிலீசுக்கு பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் ‘ருத்ரன்’ படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘ருத்ரன்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே கொண்டதாக உள்ளது. ஒரு சிறந்த கமர்ஷியல் படத்திற்கான சரியான ரன்னிங் டைம் என்று கூறப்படுகிறது.

பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.