close
Choose your channels

'நம்ம சுத்தி பெருசா ஏதோ நடக்குதுடா.. ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' டிரைலர்..!

Thursday, April 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இரண்டு நிமிடங்களுக்கும் மேல் உள்ள இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது முழுக்க முழுக்க இது ஒரு ஜனரஞ்சகமான ஆக்சன் படம் என்றும் ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருப்பதாக தெரிகிறது.

ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் அவரது கேரக்டர் மற்றும் கெட்டப் வித்தியாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் நிச்சயம் ராகவா லாரன்ஸ்-க்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment