'சந்திரமுகி 2' படத்தின் செம அப்டேட்: ரசிகர்கள் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் ’சந்திரமுகி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மைசூரில் தொடங்கி நடந்து வந்தது.
ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் முதல் பாகத்தை இயக்கிய பி. வாசு இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மரகதமணி இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டாதரணி கலை இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்ததாக லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இவ்வருட இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
#Chandramukhi2 ??️✨ first schedule wrapped up at ?? Mysore
— Yuvraaj (@proyuvraaj) August 9, 2022
Starring @offl_Lawrence, Vaigaipuyal #Vadivelu & @realradikaa
Produced by @LycaProductions
Directed by #PVasu
Music by @mmkeeravaani
Cinematography by @RDRajasekar
Art by #ThottaTharani pic.twitter.com/ujy0BBGzDQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments