'சந்திரமுகி 2' படத்தின் செம அப்டேட்: ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Tuesday,August 09 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் ’சந்திரமுகி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மைசூரில் தொடங்கி நடந்து வந்தது.

ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் முதல் பாகத்தை இயக்கிய பி. வாசு இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மரகதமணி இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டாதரணி கலை இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்ததாக லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இவ்வருட இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

More News

'பொன்னியின் செல்வன்' படத்தில் பயன்படுத்தியது உண்மையான தங்கநகைகளா? வைரல் வீடியோ

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

'மாவீரன்' படத்தில் இணைந்த பிரபல யூடியூபர்: சிவகார்த்திகேயன் தங்கை கேரக்டரா?

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'மாவீரன்' படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்

சிம்புவுக்கு குரல் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நடிகர் சிம்புவுக்காக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஒரு பாடல் பாடி இருப்பதாகவும் இந்த பாடல் வரும் சுதந்திர தினத்தில் வெளியாகும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

என் அம்மா பாடிய மாஸ் பாடல்: பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட வீடியோ

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் தனது அம்மா பாடிய மாஸ் பாடல் குறித்த வீடியோவை தனது சமூக தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

தனுஷின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' ஆஜித்: வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆஜித், தனுஷ் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.