close
Choose your channels

முடிவுக்கு வந்தது ராகவா லாரன்ஸின் அடுத்த படம்

Wednesday, July 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு 'காஞ்சனா 2' என்ற சூப்பர் ஹிட் கொடுத்த ராகவா லாரன்ஸ் நடித்து வரும் அடுத்த படம் 'மொட்டசிவா கெட்ட சிவா'. தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பட்டாஸ்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், வம்சி கிருஷ்ணா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராய்லட்சுமி ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ள இந்த படத்தை சாய்ரமணி இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்து ராகவா லாரன்ஸ் முனி 4-நாகா மற்றும் பி.வாசு இயக்கத்தில் 'ஷிவலிங்கா' ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment