ராகவா லாரன்ஸ் நடித்த 'ருத்ரன்' பர்ஸ்ட்லுக்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,June 23 2022]

பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘ருத்ரன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஒரு கையில் ஆயுதம் மற்றொரு கையில் வில்லனின் தலைமுடியை பிடித்து ஆக்ரோஷமாக இருப்பதும் அவரை சுற்றி பிணங்கள் இருப்பதுமான காட்சியை பார்க்கும் போது இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது உறுதியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பதும் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில் திருமுருகன் திரைக்கதையில் அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ‘ருத்ரன்’ திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் நாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.