கொரிய, சைனீஸ் மொழிகளில் ரீமேக் ஆகும் ராகவா லாரன்ஸ் படம்
- IndiaGlitz, [Monday,December 28 2015]
தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய பல திரைப்படங்கள் இந்திய மொழிகளில் மட்டுமின்றி வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் அல்லது டப்பிங் செய்து வருவதை நாம் அவ்வப்போது பார்த்துள்ளோம். சமீபத்தில் வெளியான 'பாகுபலி' திரைப்படம் சீன, ஜப்பானிய மொழி உள்பட உலகின் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்படுகிறது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'காஞ்சனா' திரைப்படத்தின் முதல்பாகம், பல உலக மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ராமா குரூப் நிறுவனர் சுதீர்குமார் என்பவர் காஞ்சனா' திரைப்படத்தை கொரிய, தாய், சைனீஸ் உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி சூப்ப ஹிட் ஆகியுள்ளது.
ராகவா லாரன்ஸ், சரத்குமார், ராய்லட்சுமி, கோவைசரளா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கி, தயாரித்து ஹீரோவாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 ஆம் ஆண்டு வெறும் ரூ.7 கோடியில் தயாரான இந்த படம் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.