'உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே': சித்ஸ்ரீராம் மயக்கும் குரலில் 'ருத்ரன்' பாடல்..!

  • IndiaGlitz, [Sunday,April 02 2023]

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ருத்ரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிங்கிள் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

சித்ஸ்ரீராமின் மயக்கும் குரலில் உருவான ’உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே’ என்று தொடங்கும் இந்த பாடலை கபிலன் எழுதி இருக்க ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார்.

ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இன்று வெளியாகியுள்ள மெலடி பாடலின் சில வரிகள் இதோ:

உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே’
உன் வாசம் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே
நீலவானம் நீயடி, உனை நீங்கினால் உயிரேதடி
நீதானே யாரும் இல்லா நெஞ்சில் தேடி வந்த சொந்தம் நீதானே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று ஓசை மின்னல் போல ஆனதே

More News

குழந்தைகளுடன் 'விடுதலை' படம் பார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்.. போலீசார் எடுத்த நடவடிக்கை..!

 வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான 'விடுதலை' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

உறவினர்களுடன் கலர்புல் புகைப்படங்கள் எடுத்த ரம்யா பாண்டியன்.. வீட்ல என்ன விசேஷம் தெரியுமா?

நடிகை ரம்யா பாண்டியனின் தாத்தாவின் 93வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் ரம்யா பாண்டியன் மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட பலர் கலர்ஃபுல் புகைப்படங்கள்

கருப்பு காஸ்ட்யூமில் மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. 

 நடிகை மீரா ஜாஸ்மினுக்கு தற்போது 40 வயதை தாண்டி இருந்த போதிலும் அவர் இன்னும் இளமையுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்

அஜித், விஜய்யுடன் நடித்த மந்த்ராவை ஞாபகம் இருக்கா? கணவர், குழந்தையுடன் க்யூட் புகைப்படங்கள்..!

அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை மந்த்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

மனைவியின் நிறை மாத கர்ப்பத்தை பார்ட்டி வைத்து கொண்டாடிய 'துணிவு' பட நடிகர்..!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணி ஆக இருக்கும் நிலையில் அதை கொண்டாடும் வகையில் பார்ட்டி வைத்துள்ளார்.