close
Choose your channels

விஜய்யின் 'புலி'க்கு கைகொடுத்த பிரபல இயக்குனர்

Thursday, October 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு ஒருசில ஊடகங்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தபோதிலும், இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'புலி' படத்தை அனைத்து குழந்தைகளும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் ஒரு ஃபேண்டசி படம் என்பதால் தமிழகத்தில் உள்ள ஒருசில பள்ளி நிர்வாகிகள், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை 'புலி' படத்தை பார்க்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், பிரபல இயக்குனர் மற்றும் நடிகரும், விஜய் நடித்த 'திருமலை' படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவருமான ராகவா லாரன்ஸ், தான் நடத்தி வரும் டிரஸ்ட்டில் படிக்கும் மாணவ மாணவிகளுக்காக ஒரு சிறப்பு காட்சியை விரைவில் ஏற்பாடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸை பின்பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இதேபோல் தங்கள் மாணவர்களை 'புலி' படத்தை பார்க்க வைத்தால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment