ராகவா லாரன்ஸ் கட்டிக்கொடுக்கும் முதல் வீடு இவருக்குத்தான்..
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதங்களை ஏற்படுத்திய நிலையில் அரசு, தன்னார்வ ஆர்வலர்கள், கோலிவுட் திரையுலகினர் என பலரும் முன்வந்து அம்மாவட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் இருந்த குடிசை வீடுகள் ஒட்டுமொத்தமாக சேதம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 50 பேர்களுக்கு புதிய வீடு கட்டிக்கொடுக்க உள்ளதாக சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். இதன்படி அவர் ஒரு முதிய பெண்ணுக்கு வீடு கட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்து அந்த மூதாட்டியின் சேதமடைந்த வீட்டின் காட்சிகளை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், 'எனக்கு வேறு எந்த உதவியும் வேண்டாம், இந்த குடிசையை மட்டும் சரிசெய்து கொடுங்கள், போதும்' என்று அந்த மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கும் காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும் உள்ளது. ராகவா லாரன்ஸ் செய்யும் இந்த உதவிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Hai Friends and Fans..!
— Raghava Lawrence (@offl_Lawrence) November 25, 2018
My first house build for this Amma who has been affected by the gaja Puyal. pic.twitter.com/E2nPfh6cqB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com