ராகவா லாரன்ஸ் கட்டிக்கொடுக்கும் முதல் வீடு இவருக்குத்தான்..

  • IndiaGlitz, [Monday,November 26 2018]

சமீபத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதங்களை ஏற்படுத்திய நிலையில் அரசு, தன்னார்வ ஆர்வலர்கள், கோலிவுட் திரையுலகினர் என பலரும் முன்வந்து அம்மாவட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் இருந்த குடிசை வீடுகள் ஒட்டுமொத்தமாக சேதம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 50 பேர்களுக்கு புதிய வீடு கட்டிக்கொடுக்க உள்ளதாக சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். இதன்படி அவர் ஒரு முதிய பெண்ணுக்கு வீடு கட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்து அந்த மூதாட்டியின் சேதமடைந்த வீட்டின் காட்சிகளை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், 'எனக்கு வேறு எந்த உதவியும் வேண்டாம், இந்த குடிசையை மட்டும் சரிசெய்து கொடுங்கள், போதும்' என்று அந்த மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கும் காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும் உள்ளது. ராகவா லாரன்ஸ் செய்யும் இந்த உதவிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More News

'தூக்குதுரை' வரலாறு தெரியுமா?

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானதில் இருந்து இந்த படத்தில் அவருடைய கேரக்டரில் ஒன்று 'தூக்குதுரை என்பது உறுதியாகிவிட்டது.

கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரின் குருநாதர் மற்றும் இயக்குனர் சிகரமுமான கே.பாலசந்தர் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் மரணம் அடைந்தார்

தூக்குத்துரைன்னா அடாவடி: 'விஸ்வாசம்' மோஷன் போஸ்டர் விமர்சனம்

அஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் ஒரு கட்டத்தைல் அஜித் ரசிகர்கள்

'தளபதி 63' படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

எது பேசறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு: 'கனா' டிரைலர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படமான 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.