சென்னையை பசுமையாக்க வீடு தேடி வந்து உதவி செய்யும் ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Tuesday,December 20 2016]

சமீபத்தில் வர்தா புயல் சென்னையை கோரத்தாண்டவம் ஆடியது. இதன் காரணமாக சென்னையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வேறோடு சாய்ந்து பெரும் இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. விழுந்த மரங்களுக்கு இணையாக மீண்டும் அதே அளவில் மரங்கள் நட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வற்புறுத்தி வரும் நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இதற்காக தற்போது களமிறங்கியுள்ளார்.

ஏற்கன்வே பல சமூக சேவைகள் செய்து வரும் ராகவா லாரன்ஸ் மரம் வளர்க்க விரும்புபவர்களுக்கு வீடு தேடி வந்து இலவசமாக மரக்கன்றுகளை கொடுக்க முன்வந்துள்ளார். தங்கள் வீடுகள் அல்லது தங்களது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவைப்படுகிறவர்கள் 9791500866, 9790750784, 9003037939 என்ற எண்களுக்கு போன் செய்தால் வீடு தேடி வந்து மரக்கன்றை தருவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை முதல் மரக்கன்றுகள் வழங்கப்படும்

அதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸ் தனது டிரம்ஸ் மூலம் சென்னை முழுவதும் மரக்கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளார். சென்னையை மீண்டும் பசுமையாக்க ராகவா லாரன்ஸின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

More News

இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானிலும் ரூ.5000 நோட்டு தடை. தீர்மானம் நிறைவேறியது

இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது...

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாகும் மிஸ் கேரளா

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளராக மட்டுமின்றி பிசியான நாயகனாகவும் விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ்...

சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா இட்லி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது...

வங்கி ஊழியரை விரட்டி விரட்டி அடித்த பொதுமக்கள்.

கடந்த மாதம் 8ஆம் தேதி பிரதமரின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு...

ரஜினியுடன் பணிபுரிய விரும்பிய பாலிவுட் பிரபலம்

திரையுலகில் நுழையும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ரஜினியுடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.