சென்னையை பசுமையாக்க வீடு தேடி வந்து உதவி செய்யும் ராகவா லாரன்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வர்தா புயல் சென்னையை கோரத்தாண்டவம் ஆடியது. இதன் காரணமாக சென்னையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வேறோடு சாய்ந்து பெரும் இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. விழுந்த மரங்களுக்கு இணையாக மீண்டும் அதே அளவில் மரங்கள் நட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வற்புறுத்தி வரும் நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இதற்காக தற்போது களமிறங்கியுள்ளார்.
ஏற்கன்வே பல சமூக சேவைகள் செய்து வரும் ராகவா லாரன்ஸ் மரம் வளர்க்க விரும்புபவர்களுக்கு வீடு தேடி வந்து இலவசமாக மரக்கன்றுகளை கொடுக்க முன்வந்துள்ளார். தங்கள் வீடுகள் அல்லது தங்களது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவைப்படுகிறவர்கள் 9791500866, 9790750784, 9003037939 என்ற எண்களுக்கு போன் செய்தால் வீடு தேடி வந்து மரக்கன்றை தருவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை முதல் மரக்கன்றுகள் வழங்கப்படும்
அதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸ் தனது டிரம்ஸ் மூலம் சென்னை முழுவதும் மரக்கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளார். சென்னையை மீண்டும் பசுமையாக்க ராகவா லாரன்ஸின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com