ராகவா லாரன்ஸின் அடுத்தகட்ட நிதியுதவி குறித்த ஆச்சரியமான தகவல்

நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் 4 கோடிக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி தனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களிடமிருந்து ரூபாய் 25 லட்சம் சம்பளம் முன்பணமாக பெற்று அந்தப் பணத்தை தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். இந்த பொறுப்பை தயாரிப்பாளர் கதிரேசன் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரூபாய் ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தின் சம்பளத்திலிருந்து ரூபாய் 25 லட்சத்தில் 3385 தூய்மை பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் கதிரேசன் அவர்கள் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தங்களது சம்பளத்தில் 25 லட்சம் ரூபாயினை தூய்மைப் பணியாளருக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் விடுமாறு தாங்கள் கேட்டுக் கொண்டபடி 3385 தூய்மைப் பணியாளர்களின் அடையாள அட்டையின் பெயரில் இருக்கும் வங்கி கணக்குகள் உறுதி செய்யப்பட்டு அனைவரின் வங்கி கணக்கிலும் பணம் சென்றடைந்து விட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும் பணம் பணம் கிடைக்க பெற்றவர்களின் விவரங்களையும் அவர் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ராகவா லாரன்ஸின் நிதி உதவியால் 3385 தூய்மைப் பணியாளர்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது