பிரபல பாடலாசிரியருக்கு தங்க மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

பிரபல இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'காஞ்சனா' மற்றும் 'காஞ்சனா 2' படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் விவேகா 'காஞ்சனா 3' படத்திலும் பாடல் எழுதியிருப்பதாகவும், அவருடைய பாடல் வரிகளை பார்த்து வியந்த ராகவா லாரன்ஸ் அவருக்கு தங்கமோதிரம் பரிசளித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை விவேகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, கபீர்சிங் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரலில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.