ராகவா லாரன்ஸ் 25வது படம் சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் ரீமேக்கா? என்ன கதை?

  • IndiaGlitz, [Monday,September 16 2024]

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25 வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரமேஷ் வர்மா என்ற பிரபல தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் இந்த படம் குறித்த சில கூடுதல் தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

பாலிவுட்டில் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் லக்ஷயா நடிப்பில் உருவான ’கில்’ என்ற படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் தான் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள 25வது படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதை என்னவெனில் ஹீரோ மற்றும் அவரது நண்பர் தேசிய பாதுகாப்பு படையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் ஹீரோ ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் ஹீரோயின் தந்தை மிகப்பெரிய பணக்காரர் என்பதால் காதல் கைகூடாமல் இருக்கும்.

இந்த நிலையில் ஹீரோயினுக்கு வேறு நபருடன் நிச்சயதார்த்தம் நடக்கும் நிலையில் உடனே உன்னை அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்று ஹீரோ கூறுகிறார். ஆனால் இப்போது வேண்டாம், நாளை நாங்கள் ரயிலில் ஊருக்கு போகிறோம், அப்போது அதே ரயிலில் நீங்கள் வாருங்கள், ரயிலில் இருந்து தப்பித்து விடலாம் என்று ஹீரோயின் கூறுகிறார்.

இந்த நிலையில் ஹீரோயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரயிலில் ஏசி பெட்டியில் இருக்க, அதே ரயிலில் ஹீரோ, அவரது நண்பர் பயணிக்கின்றனர். இந்த நேரத்தில் திடீரென கொள்ளையர்கள் ரயிலுக்குள் புகுந்து விடுகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் ’கில்’ படத்தின் கதை.

இந்த படம் தான் தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

More News

ரஜினி, விஜய், தனுஷ் படங்களின் டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்.. கைதாவாரா?

ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் கூறப்பட்டுள்ள நிலையில்

'கண்மணி ஓகேவா? சம்மதம் பெற்று தாலி கட்டிய தொகுப்பாளர்.. சீரியல் நடிகையின் திருமண வீடியோ..!

'கண்மணி ஓகே வா' என சீரியல் நடிகையிடம் அனுமதி வாங்கி அதன் பின்னர் பிரபல தொகுப்பாளர் தாலி கட்டிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

மடியில் குழந்தை.. கணவருடன் லிப்லாக்.. அமலாபால் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்..!

நடிகை அமலாபால் தனது மடியில் குழந்தையை வைத்திருக்க, கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள

எல்லாரையும் தம்பி, பையன்னு சொல்வாங்க.. ஆனால்.. சுசித்ரா கூறும் திடுக்கிடும் தகவல்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

புகழ்பெற்ற நாவலின் உரிமையை வாங்கிய சுதா கொங்காரா? எந்த ஹீரோ பொருத்தமாக இருப்பார்?

ஒரு புகழ்பெற்ற நாவலை திரைப்படம் ஆக்கும் உரிமையை இயக்குனர்  சுதா கொங்காரா பெற்றுள்ள நிலையில் அந்த நாவலில் உள்ள ஹீரோவுக்கு பொருத்தமான நடிகர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.